Description
ஜுராசிக் காலம் என்று பிரிக்கப்படும் காலத்திற்கு முன்னும் பின்னும் கூடப் பல உயிரினங்கள் தோன்றி மறைந்துள்ளன. உலகம் முழுவதிலும் இருந்து இப்படி வாழ்ந்து மடிந்த உயிர்களின் எச்சங்கள் கிடைத்தபடியே உள்ளன. நமது தமிழ்நாட்டிலும் கூட டைனோசர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் கிடைத்த செய்திகளை நீங்கள் நாளிதழ்களில் படித்திருப்பீர்கள்.