Description
சாம்ராட், மிகுந்த உற்சாகத்துடன் இருந்தான். அது டிசம்பர் மாதம். அன்று ஞாயிற்றுக்கிழமை. கடல் ஆமை ஆராய்ச்சியாளர், சீமா அம்மாவுடன் சேர்ந்து அந்தமான் தீவுகளில் தனது முதல் களப்பணிக்குத் தயாரானான். அம்மாவின் உதவியாளர் ஆவதும், அந்தமானைச் சுற்றியுள்ள தீவுகளில் கடல்வாழ் உயிரினங்கள் பற்றி ஆராய்ச்சி செய்ய அடிக்கடி பயணிப்பதும் அவனது நீண்ட நாளைய கனவு.