மூன்று விரல்


Author: இரா. முருகன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 460.00

Description

இந்த நாவலில் வளைய வருகிறவர்கள் பெரும்பாலும் கம்ப்யூட்டர் தொழிலில் ஈடுபட்டவர்கள். ஆனால், தலையில் கொம்பு முளைக்காத, சட்டைப் பையிலும் கைப்பையிலும் டாலர் நோட்டுகள் பிதுங்கி வழிய, கழுத்தை இறுக்கும் டையும் கோட்டும் நுனி நாக்கு ஆங்கிலமுமாக சூயிங்கம்மை மென்றபடி தரைக்கு மேலே சரியாக பத்து சென்டிமீட்டர் உயரத்தில் மிதக்காத சாதாரண மனிதர்கள் இவர்கள். ‘அவனா... அமெரிக்காவிலே பெரிய கம்ப்யூட்டர் கம்பெனியிலே மாசம் பத்து லட்சம் சம்பாதிச்சு லாஸ் ஏஞசல்ஸிலே வீடும் காரும் வெள்ளைக்காரி தொடுப்புமா இருக்கானாம்...' என்று பொருமி வியத்தலும், ‘கம்ப்யூட்டர்காரங்களுக்கு எல்லாம் அஷ்டமத்திலே சனி பிடிச்சு தொழிலே நசிஞ்சுபோய், அவனவன் ராயர் காப்பி ஹோட்டல்லே வாழைக்காய் நறுக்கிக் கொடுத்திட்டுக் கிடக்கானாம்... நல்லா வேணும்' என்று இருமி எச்சில் உமிழ்ந்து இகழ்தலும் இங்கே இலமே! * இதுவரை 12 நாவல்கள் எழுதிய இரா.முருகனின் முதல் நாவல் இது. கம்ப்யூட்டர் மென்பொருளாளர் பற்றித் தமிழில் வந்த முதல் நாவலும் இதுவே.

You may also like

Recently viewed