Description
வகுப்பறை உலகம் என்னும் இந்த நூல் உலகின் 29 நாடுகளில் வகுப்பறைகள் எப்படியுள்ளன என்பதைப் படம் பிடித்துக் காட்டும் ஓர் ஆவணம். உலகின் தலைசிறந்த கல்விமுறையைக் கொண்ட ஐரோப்பிய நாடுகள், கல்வியால் முன்னேறிய ஆப்பிரிக்க நாடுகள், மன்னர் குடும்பமே அரசுப் பள்ளியில் படிக்கும் நாடு என்று பல்வேறு நாடுகளின் கல்விமுறைகள் குறித்துப் படிக்கும்போது ஒரு விஷயம் புரிகிறது. கல்விக்காகத் தங்கள் பட்ஜெட்டில் அதிக நிதி ஒதுக்கும் நாடுகள் சிறப்பாக இருக்கின்றன. கட்டணம் கழுத்தை நெரிக்காத, தனியாருக்கும் அரசுக்கும் தரத்திலும் மற்றவற்றிலும் வித்தியாசம் இல்லாத நாடுகளில் கல்வி சிறப்பாக இருக்கிறது. இந்தியாவுக்கு இதெல்லாம் பாடங்கள்.