ஈரவாதை


Author: கா. ரபீக் ராஜா

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 220.00

Description

ஈரவாதை, இன்று உலகம் முழுவதும் அச்சுறுத்தி வரும் ஒரு நோயை பற்றி பேசுகிறது. ஒருவருக்கொருவர் ஆதரவாக பற்றிக்கொள்ளும் கரங்களின் ஈரங்களை பேசுகிறது. நிச்சயமாக இதில் நோய்க்கான தீர்வை சொல்லவில்லை, புரிதலுடன் ஒரு நோயை கடந்து போதலை அழுத்தமாக சொல்லியிருக்கிறேன். ஒரு நடுத்தர வர்க்கத்தின் அசலியல்புகளை கவனமாக பதிவு செய்திருக்கிறேன். அடித்து வெளுத்து துவைத்து காயப்போடும் மாயப்புனைவு எழுத்துகளில் எனக்கு நம்பிக்கை இல்லை. இந்த நாவலில் வாசிப்பவர்களின் மனதில் எழுந்து அடங்கும் சித்திரத்தை சாத்தியப்படுத்தியிருப்பதாக நினைக்கிறேன். எழுத்து போக்கில் தீவிரத்தை எடுக்காமல் எதார்த்தத்தை அதன் போக்கில் கையாண்டிருக்கிறேன். நோயில் மீண்டு மீண்டுகொண்டிருக்கும் அனைவருக்கும் புதிய வெளிச்சத்தை பாய்ச்சி நம்பிக்கையை நீவும் என உறுதியாய் நம்புகிறேன்.

You may also like

Recently viewed