Description
பெரம்பலூர் இலக்கிய வட்டம் மற்றும் செகாவ் இலக்கிய விருது -2025 நடத்திய சிறுகதை நூல்கள் பரிசுப் பெற்ற சிறுகதை
இஸ்லாமியர்கள் என்றாலே பணம் செழித்திருக்கும்/வெளிநாடுகளில் வசதியாய் வாழும்/நகைகள் அணிவகுக்கும், விருந்துப் பந்திகளில் அதிக சிரத்தையெடுக்கும் பிரம்மாண்ட நபர்கள் மட்டுமா? அதைத் தாண்டியும் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்வியல், பணம் படைத்தவர்களின் வாழ்வியலிலிருந்து மாறுபட்டவை. அத்தகையவர்கள்மீது எந்தப் பூச்சும் இன்றி, வார்த்தைகளில் எந்த அரிதாரமும் அற்று கதை வடிவில் தந்திருக்கின்றார் சகோதரர் தாஹிர்.