Description
பக்தி மார்க்கத்தில் அம்பாளுக்கென்று ஒரு தனி சிறப்பு உண்டு. சிவபெருமான். அம்பாள் இல்லாமல் இருக்கமாட்டார். ஆனால், அம்பாள் தனது கோவிலில் தனித்தே இருப்பாள். பெண் துணையின்றி ஆண்கள் வாழ்வது மிக சிரமம், ஆனால், ஆண் துணையின்றி பெண்கள் வாழ முடியும் என்பதற்கு எடுத்துகக்ட்டே அம்மன் கோவில்கள்.
அத்தகைய அம்மன் கோவில்களின் வரலாற்று தொகுப்பே இந்த நூல். இந்தியா முழுவதும் உள்ள அம்மன் கோவில்களின் வரலாறு இதில் சொல்லப்பட்டுள்ளது. வரலாறு மட்டுமின்றி, அந்தக் கோவில்களுக்கு செல்லும் வழி, இதர விபரங்களும் தரப்பட்டுள்ளதால், அம்மன் கோவில் சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த கைடாகவும் உள்ளது. இது மட்டுமல்ல, அந்தந்த அம்மன்களுக்குரிய போற்றியும் தரப்பட்டுள்ளதால், பண்டிகைகள், வெள்ளி, செவ்வாய்க்கிழமை என ஆண்டு முழுவதும் இந்த புத்தகம் உங்கள் கரகங்களில் தவழும் என்பதில் ஜயமில்லை.