Description
பரிணாம வளர்ச்சியின் படிநிலையில் முன்வரிசையில் இருக்கும் மணிதன், புறத்தே இன்றைய அறிவியல் தொழில்நுட்பத்தின் உச்சகட்ட வசதிகளை தூய்த்திடும் அதேவேளையில், அகந்தே மொழியில் புழங்கும் தொல்பழங்காலத் தொன்மங்களில் ஆசுவாசம் தேடும் ஒருவணாகவும் இருக்கிறான். உலகியல் வாழ்வின் நிதர்சனமும், உள்ளத்தில் ஊறி நிற்கும் பாரம்பரிய நம்பிக்கைகளும் ஒன்றையொன்று எதிரிடும் தருணங்களின் தந்தளிப்புகளை உன்னித்து நோக்கி ஆராப்பவையென
இந்தொகுப்பிலுள்ள கதைகளை பொதுவாகச் சுட்டலாம். அழுத்தமான காட்சிப் படிமங்கள் பலவற்றைக் கொண்டிருக்கும் இக்கதைகள் பலவிடங்களில் பூரணமான
தொடர்புறுத்தலுக்கு பதிலாக வாசக ஊகத்திற்கு விடப்பட்ட திறந்த முனைகளைக் கொண்டவையாக அமைந்திருக்கின்றன. தோட்டச்செடிகளைப் போல ஒரே சீராக செப்பனிடப்பட்டவையாக அல்லாமல் உருவிலும் உள்ளடக்கத்தின் காட்டுத் தாவரங்களின் கட்டின்மையைக் கொண்டவையாக காட்சிதரும் இக்கதைகளில் முன்னோடிகளின் சாயல்கள் எதுவும் தொனிக்காத சுயமானதொரு மொழிநடையை காணமுடிவது சிறப்பு. நிதானமாகவும் நிர்தாட்சண்யமான
விவரணைகளோடும் விரியும் இக்கநைகளில் சுற்பனையின் அழகும் அனுபவத்தின் தர்க்கமும் ஒருமிக்கும் சில மாயத்தருணங்கள் அலாதியானதொரு வாரிப்பணுவத்தை நல்குகின்றன. அறிந்ததன் விளிம்பிலிருந்து அறியாதவற்றின் எல்லையின்மைக்கு நகா எப்போதும்
நாம் எடுத்துவைக்கவேண்டியது ஓர் எட்டு மட்டுமே. அது அவ்வளவு எவிதல்ல. அந்த எட்டுவைப்பின் தயக்கத்தையும் விடுதலையுணர்வையும் இக்கதைகளில் நாம் காணலாம்.