Description
அரிதும் முக்கியத்துவமிக்கதுமான ஆங்கில மற்றும் தமிழ் நூல்களை தமிழ் வாசகப் பரப்புக்கு அடையாளப்படுத்தும் நோக்கில் எழுதப்பட்ட நூல் அறிமுகக் கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல்.
திருப்புடைமருதூர் ஓவியங்கள், பழனிமலைகளின் தொல்லியல், தாது வருடப் பஞ்சம் போன்றவை குறித்த சமூகவியல் நூல்கள் மற்றும் அம்பேத்கர், ராமானுஜரின் வாழ்க்கை வரலாறு. பகவத் கீதை அச்சாக்கம் பற்றிய நூல்களுடன் தலித்துகளின் மஹத் போராட்ட எழுச்சி நூல் குறித்து விரிவாக விளக்கப்படுத்தும் செழுமிய இத்தொகுப்பு தேர்ந்த வாசகர்களுக்கான வாசிப்பு வழிகாட்டியாகும்.