Description
ஹஜ், உம்ராவை நிறைவேற்றும் வழிமுறைகளை விரிவாக விளக்கும் நூற்கள் பல உள்ளது. ஆனால், ஹஜ்ஜின் போது ஓத வேண்டியவற்றை நினைவில் வைப்பது ஹாஜிகள் பலருக்கு கடினமாக உள்ளது. உதாரணமாக, ஸயீயின் தொடக்கத்தில் என்ன துஆ, திக்ர் ஓத வேண்டும்? கூட்ட நெரிசலில், பையில் உள்ள நூலை எடுத்து ஓதுவதும் சிரமமே.
வாழ்வில் ஒரு முறை செய்யும் கடமை என்பதால், சரியாக நிறைவேற்றவில்லையோ என்ற கவலை ஹாஜிகள் பலருக்கு உள்ளது.
இதனை நீக்கும் விதமாக, ஹஜ் உம்ராவின் சுருக்க கையேட்டினை தயாரித்து உள்ளோம். இதில் முக்கியமான வழிபாட்டு முறைகள் மட்டுமே தொகுக்கப்பட்டுள்ளது. இஹ்ராம் ஆடையில், கழுத்தில் தொங்கவிட்டவாறே இந்நூலை பயன்படுத்திக் கொள்ளலாம்.