Description
வாழும் காலத்தில் மத நல்லிணக்கத்தைப் போகும் இடமெல்லாம் மலரச் செய்தவரான பாபா, இன்றைய நவநாகரிக யுகத்தின் பொருள்முதல் வாதத்தின் பக்க விளைவுகளை முன்கூட்டியே கணித்தவர். எளிமையான வாழ்க்கை முறைக்கு உதாரணமாகத் திகழ்ந்தவர். ஜீவகாருண்யத்தைப் பறைசாற்றியவர். பல இடங்களுக்கு பிரயாணப் பட்டவர். அவர் ஜீவசமாதி அடைந்து ஒரு நூற்றாண்டைக் கடந்து, இன்றைய கணினி யுகத்திலும் பல அற்புதங்களை நிகழ்த்தும் கர்த்தாவாகக் கருதப்படுவது ஏன்? பொருளாதாரப் பின்புலம், படிப்பு, மதம் சார்ந்த நம்பிக்கை போன்ற பல்வேறு வேறுபாடுகளைக் கடந்து, இவ்வளவு பெரிய மக்கள் திரளை அவர்பால் ஈர்க்கும் விசை எது? போன்ற கேள்விகளுக்கு பதில் தேடும் முயற்சியில் சோம வள்ளியப்பன். மேலாண் கலை பயிற்றுனர், பங்குச்சந்தை ஆலோசகர், உணர்வுகளையும் மனித உறவுகளை யும் பேணுவது பற்றிப் பயிற்சி கொடுப்பவர் போன்ற தன் தொழிற்துறை அடையாளங்களை சாய்பாபாவின் வாயிலிலே கழற்றி வைத்துவிட்டு, ஒரு பக்தனாகத் தன் அனுபவங்களை, தாம் கண்டு, கேட்டு, பார்த்த விஷயங்களைச் சிறு சிறு கதைகளாகப் பதிவு செய்துள்ளார்.