Description
சாவு என்றால் என்ன? இது எல்லோரும் கேட்கும் மிக அடிப்படையான கேள்வி. சாவை நாம் மூன்றாம் மனிதர் பார்வையிலிருந்தே பார்க்கிறோம். நமக்கும் சாவு வரும் என்று நினைப்பதே இல்லை. அப்படி நினைக்கும் போது பயம் ஏற்படுகிறது. அந்த பயத்தைப் புரிதல் போக்கும். புரிதல் உண்டானால் தெளிவு பிறக்கும். அழிந்து போகும் உடலில் எதற்கு இத்தனை உணர்வுகள்? சாவுக்கு பிறகு உடல் மண்ணுக்குப் போகிறது அல்லது தீக்கு இரையாகிறது, ஆனால் ஆன்மா எங்கே போகிறது? பிறப்பு நம் கையில் இல்லை. இறப்பு நம் கட்டுப்பாட்டில் இல்லை. நமக்கும் ஒருநாள் சாவு உண்டுதானே! சாவு வரும் போது வரவேற்கும் துணிச்சல் இருந்தால் போதும். வாழ்ந்த வாழ்க்கை ஒரு அர்த்தம் பெறலாம்.