Description
நா. பார்த்தசாரதி
விருதுநகர்மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நதிக்குடி கிராமத்தில் பிறந்தவர். சிறுகதை, சமூகநாவல், சரித்திர நாவல், கவிதை, நாடகம், கட்டுரை, கேள்வி பதில், பயண இலக்கியம், விமர்சனங்கள் எழுதியவர். தீபம் என்ற இதழை நடத்தியதால் 'தீபம்' நா.பார்த்தசாரதி என அழைக்கப்படுபவர்.
அவரின் முதல் நாவல் குறிஞ்சி மலர்.
'பொய்முகங்கள்', 'முள்வேலிகள்', 'சுதந்திரக்கனவுகள்', 'துளசிமாடம்', 'மணிபல்லவம்' 'நித்திலவல்லி', 'பாண்டிமாதேவி', 'ராணிமங்கம்மாள்' உள்ளிட்ட பல நூல்கள் குறிப்பிடத் தக்கவை.
சமுதாயவீதி நாவலுக்காக 1971 ல்
சாகித்ய அகாதெமி விருது பெற்றார்