காலந்தோறும் பெண்


Author: ராஜம் கிருஷ்ணன்

Pages: 170

Year: 2024

Price:
Sale priceRs. 170.00

Description

சமுதாயத்தின் உற்பத்திக்கான சக்தியாகத் திகழும் அவளுடைய நிலையை இன்றைய சமுதாய அமைப்பின் ஆதிக்கக் கோட்பாடுகளை நாலியும் பீலியுமாகக் குதறி எறிய முற்பட்டிருந்தும் ஒரு வார்த்தை கேட்கத் தெரியாதவளாகவே இருக்கிறாள். உயிரற்ற அணிகளால் கவர்ச்சி என்ற பொய்மையைத் தன்னில் ஏற்றிக்கொள்வதையே நல்வாழ்வுக் கான சாயுச்சியம் என்று கருதி, அதற்காகத் தனது ஏனைய மேன்மை நலங்களைப் பணயமாக்க அவள் தயங்குவதில்லை. கற்பொழுக்கம் என்ற கோலினால் அவளைக் குற்றுயிராக அடித்துக் குப்பையில் தள்ளினாலும், அந்த அடியை உவந்து ஏற்றுக்கொள்வது போல் தலைவணங்குவதுடன், குப்பையிலும் தானே வீழ்ந்ததாக, அந்தப் பழியையும் குற்ற உணர்வையும் தானே சுமக்கிறாள் இவளுக்கு அறிவு இருக்கிறது. ஆனால் அது இயங்குவது நின்று எத்தனையோ காலமாகிவிட்டது. அதில் இயற்கையான உயிரோட்டம் கிடையாது. குதிரைச் சேணம் போல் அவளுடைய அறிவுக் கண்களும் சேணம் சுமக்கின்றன. அந்தச் சேணங்களின் பார்வைக்கு உட்பட்டு, அவளது இயற்கை யான ஆளுமை மலர்ச்சி குறுக்கப்பட்டு - ஏன் இந்த நிலை? இந்த முடக்கம் எப்படி நேர்ந்தது? ஒவ்வொரு படிக்கட்டிலும் இவளது அறிவியக்க மலர்ச்சி கட்டுப்படுத்தப்படுவது எதற்காக? இவள் தன்னைத்தானே உணர இயலாதபடி, பிறவி எடுத்த நாளிலிருந்து ஒருவனுக்காக என்ற கருத்தைச் சுமக்க வைப்பதன் காரணம் என்ன? - ராஜம் கிருஷ்ணன்

You may also like

Recently viewed