Author: சுசர்ல.வெங்கடரமணி

Pages: 140

Year: 2022

Price:
Sale priceRs. 180.00

Description

முடிவு தெரியாத நீள்பாதையே வாழ்க்கை. இதில் நாம் பலதரப்பட்ட சக மனிதர்களுடன் பயணிக்க வேண்டியிருக்கிறது. அப்படிப்பட்ட பயணங்களில், நமக்கு ஏற்படும் அனுபவங்கள், பல சமயங்களில் நமக்குப் பாடங்களாகி விடுகின்றன. அவை, நம்மை வழிநடத்தும் ஆசிரியர்களாகவும் அமைந்து விடுகின்றன. மனத்திலே ஏற்படும் தாக்கங்கள், அவற்றின் விளைவால் ஏற்படுகின்ற எண்ணங்கள் ஆகியவற்றை அவ்வப்போது பதிவு செய்து வைக்கும் பழக்கம் மிகவும் நல்லது. சோர்ந்துவிடும் சமயங்களில் அவற்றை எடுத்துப் படிக்கும்போது, பழைய டைரிகளைப் போல இவையும் நாம் நடந்து வந்த பாதையையும் இனி எடுக்க வேண்டிய முடிவுகளையும் நமக்குச் சொல்லும் ஆசானாகப் பல தருணங்களில் இருந்திருக்கின்றன அப்படிப்பட்ட எண்ணக் கோர்வைகளைத் தொகுத்து, “கற்பதுவும் கருதுவதும்” எனத் தலைப்பிட்டு இங்கே வழங்கியுள்ளேன். - சுசர்ல வெங்கடரமணி.

You may also like

Recently viewed