Description
ரசிக்கும் சிறுகதைகளின் தொகுப்பு நுால். இளம் பெண்ணை திருமணம் செய்த பெரியவரின் சந்தேக பார்வை, வாழ்வை புரட்டிப் போடுவதைக் கூறும் சிறுகதை கவனிக்க வைக்கிறது.
சாக்கடை கழிவை அகற்றும் வாலிபன் வாழ்க்கை பற்றிய கதை யோசிக்க வைக்கிறது. பணி செய்யும் வீட்டார் அவனை நடத்தும் விதம், அதற்கான காரணங்கள் புரியாமல் சிறுவன் பரிதாபப்படுவதும் காட்டப்பட்டுள்ளது.
கடவுளுக்கு படைப்பதை விட, பசியால் வாடும் ஏழைகளையே முதலில் கவனிக்க வேண்டும் என்பதை, மனித குலத்திற்கு ஒரு சிறுகதை விளக்குகிறது. அதில், பசியால் வாடும் வேலைக்கார பெண்ணின் மகனுக்கு உணவளிக்க எடுத்த முயற்சி சிரிக்க வைக்கிறது. சிந்திக்க வைக்கும் சிறுகதை நுால்.
–- முகில்குமரன்