Description
“உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்”
என்று மணிமேகலை காலத்திலேயே சொல்லப்பட்டுள்ளது. அவ்வாறு கொடுக்கும் உணவு, சத்துள்ளதாக, தரமானதாக இருக்க வேண்டும். இந்த நூலின் நோக்கம் அது தான். யார் யார் என்னென்ன உணவு உண்டால், உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்பதை இந்த நூல் ஆய்வு செய்திருக்கிறது. பிறந்த குழந்தைக்கு சீம்பால் கொடுப்பதில் துவங்கி, நூறு வயது முதியவர் வரைக்கும் என்ன உணவு உண்ணலாம் என்பதை ஆய்வு செய்து, ஹைதராபாத்திலுள்ள தேசிய உணவு ஊட்ட நிறுவனத்தின் பரிந்துரைகளை இணைத்து தந்துள்ளார் டாக்டர் கு.கணேசன். ஆறு முதல் நூறு வரையானவர்களுக்கான நா ருசி நூல் இது.