Description
'கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே' என நம் தமிழ்க்குடி குறித்துப் பெருமை கொள்கிறது புறப்பொருள் வெண்பாமாலை, இதற்கு ஆதாரமாக விளங்குகிறது விழுப்புரம் மாவட்டம் கல்தோன்றிய காலம் முதல் இன்றைய நாள் வரையிலான வரலாறு இங்கு ஏராளம், ஏராளம். இவற்றை எல்லாம் தக்க ஆய்வின் துணைக்கொண்டு விரிவாகச் சொல்கிறது இந்நூல், இந்த மாவட்டத்தின் வரலாற்றை வெளியுலகம் முழுமையாக அறிந்திருக்கவில்லை என்பது எந்தளவுக்கு உண்மையோ அதே அளவு இங்கிருப்பவர்களும் கூட இம்மண்ணின் பெருமைகளை முழுமையாக அறியவும் உணரவும் இல்லை என்பதும் உண்மை. இந்த இடைவெளியை இந்நூல் இட்டு நிரப்பும் எனும் நம்பிக்கை இருக்கிறது' கோ.செங்குட்டுவன்