Description
யோகிராஜ் வேதாத்திரி மகரிஷி அவர்கள் தமிழ்நாடு, இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் அறியப்பட்டவர். ஆன்மிகம், யோகா, தியானம் போன்றவை மட்டும் அல்லாமல் விஞ்ஞானம், வான சாஸ்திரம், யோக நுட்பங்கள், கடவுள் பற்றிய அறிவியல் பூர்வ விளக்கங்கள், உளவியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம், உலக அமைதி ஆகிய சகல துறைகளிலும் மகரிஷி தனது பங்களிப்பை ஆற்றியுள்ளார். வேதாத்திரி மகரிஷி அவர்கள் உலக மக்களின் மனம், உடல், அவர்களின் செயல்கள் ஆகியவற்றை படிப்படியாக சீரமைத்து - உலகை அமைதிப் பூங்காவாக மாற்ற விரும்பினார். அதன் அடிப்படையிலேயே “மனவளக்கலை யோகா” முறைகளை அவர் உருவாக்கினார். சித்தர்களின் வழி வந்த, மகரிஷி அவர்களின் பன்முகத் தன்மையை இந்நூல் எளிமையாகவும், அறிவியல் பூர்வமாகவும் விளக்குகிறது. மகரிஷியின் பல்வேறு பரிமாணங்களை உங்களுக்கு அறிமுகப்படுத்தி இந்நூல் உங்களை நிச்சயம் ஆச்சரியத்தில் ஆழ்த்தும்.