Description
இந்தியாவில் இடதுசாரி கொள்கை பற்றிய ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு நுால். பல்வேறு சித்தாந்தங்களையும் உலக நடப்புகளையும் வரலாற்று பின்புலத்தில் அலசுகிறது.
உலகளவில் சட்டப்படியான பொதுவுடைமைக் கொள்கையை நோக்கி, முதல் வித்திட்டவர் முதலாளி ராபர்ட் ஓவன் என்பதைக் கூறி, மாபெரும் இயக்கமாக உருவானதை விவரிக்கிறது. பவுத்த சமயக் கோட்பாட்டிற்கும், இடதுசாரியத்திற்கும் இடையிலான தத்துவங்களை ஒப்பீடு செய்கிறது. மக்களின் நல்லிணக்கத்திற்கும், சமத்துவத்திற்கும் மேம்பட்ட வாழ்க்கைக்கும் மேலோங்கி நிற்பதை நிறுவுகிறது.
நேருவின் பார்வையில் ஜனநாயகம் என்பதே பொதுவுடைமைக் கொள்கைகளை உள்வாங்கி நிகழ்வதாகக் கூறும் ஆவண நுால்.
– கவிஞர் மெய்ஞானி பிரபாகரபாபு