Description
சிங்கப் பாதை - இந்திய சுந்திரப் போராட்டத்தில் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் வீர வரலாறு.
இந்திய சுதந்திரப் போராட்டம் இரண்டு வழிகளை முதன்மையாகக் கொண்டிருந்தது. ஒன்று, அமைதி வழியிலான அஹிம்சைப் போராட்டம். இன்னொன்று, ஆயுதப் போராட்டம்.
சரியாகச் சொல்லவேண்டுமென்றால், பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்குச் சுதந்திரம் அளிக்க முடிவெடுக்க முக்கியக் காரணங்களுள் ஒன்று, இந்தியாவில் தீவிரமாகிக்கொண்டு சென்ற ஆயுதப் போராட்டமும்தான் எனலாம். ஆனால் அஹிம்சைப் போராட்டம் இங்கு பேசப்பட்ட அளவுக்கு ஆயுதப் போராட்டம் பேசப்படவில்லை. காந்திஜியின் மக்கள் செல்வாக்கும், அரசியல்ரீதியான வெற்றியும் இதற்குக் காரணம் என்றாலும், அவை மட்டுமே காரணம் அல்ல.
இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காங்கிரஸ் அரசுகள் ஆயுதம் ஏந்திப் போராடியவர்களின் வரலாற்றுப் பங்களிப்பைக் கண்டுகொள்ளவில்லை அல்லது குறைத்து மதிப்பிட்டன அல்லது வேண்டுமென்றே மறைத்தன. இந்தக் குறையைப் போக்க வந்திருக்கும் புத்தகம் இது.
இந்திய சுதந்திர ஆயுதப் போராட்டத்தின் தொடக்கம், அதன் தொடர்ச்சி, அதன் உச்சம், இந்தியாவுக்குப் பலிதானமான பல வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள், அவர்களது பங்களிப்புகள் என அனைத்துத் தகவல்களையும் தரும் அரிய நூல் இது.
இந்திய சுதந்திரத்துக்காக இத்தனை பங்களிப்புகளா என்று நம்மைத் திகைக்க வைக்கும் வகையில், உணர்வுபூர்வமாக எழுதி இருக்கிறார் B.K.ராமச்சந்திரன்.
ஆயுதப் போராட்டத்தை விவரிக்கும் நூல் என்றாலும், எந்த ஓர் இடத்திலும் அஹிம்சைப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தவில்லை என்பது இந்தப் புத்தகத்தின் நடுநிலைத்தன்மையைப் பறைசாற்றுகிறது.