Description
108 திவ்ய தேசங்கள் என்பது பெருமாள் பக்தர்களின் பெருமை. நம் பாரத தேசம் முழுவதுமாகப் பரவியிருக்கக் கூடிய இத்திருத்தலங்களில் நாம் ஊனோடும் உணர்வோடும் சென்று தரிசிக்கக் கூடியவை 108 திருக்கோவில்கள். மீதமிரண்டும் திருமால் திருவடையைச் சேர்ந்து அதற்குப் பின் அவர் வழிகாட்டலில் நாம் தரிசிக்கக் கூடியவை.
உடலில் ஜீவன் வற்றி. தள்ளாடும் வயோதிகத்தில், இறைத் தலங்களுக்குச் சென்று வழிபட இயலாமல் போகும் என்பதால் இளமையிலேயே இறையனுபவமும் பெற்றிடுமாறு பெரியவர்கள் வலியுறுத்துகிறார்கள்.