Description
திருமலை நாயக்கர் தமது ஆட்சிப் பகுதியை விரிவடையச் செய்ய பலபோர்கள் நடத்தியுள்ளார். மைசூர்ப் போர், திருவாங்கூர்போர், சேது நாட்டுப்போர், விசயநகர வேந்தருடன் செய்தபோர், செஞ்சிப்போர், இரண்டாம் மைசூர் முக்கறுப்புப் போர் முதலிய போர்கள் இவர் வெற்றிகண்ட போர்களில் குறிப்பிடத்தக்கவையாகும். தொடக்கக் காலத்தில் விசய நகரப் பேரரசுக்குப் கட்டுப்பட்டு நடந்த திருமலை நாயக்கர் தமது படைபலத்தாலும் வெற்றித் திறத்தாலும் தன்னாட்சிபெற்ற மாமன்னராக மாறிப் புகழ்பெற்று விளங்கினார். காவல்மிகுந்த கோட்டைகள் பலவற்றைத் தன்னாட்சியில் உள்ள பல இடங்களில் திருமலை நாயக்கர் தோற்றுவித்திருந்தார் என்று டெயிலர் பாதிரியார் அவ ர்கள் பதிப்பித்த கையெழுத்துப் பிரதி எடுத்துக் கூறுகின்றது. திருமலை நாயக்கர் தன்னாட்சியில் செய்து முடித்த கலைப்பணிகளும், சமயப்பணிகளும் பலவாகும். மதுரை மாநகரில் இவர் கட்டிமுடித்த அரண்மனை தென்னகத்தில் கி.பி. 17ஆம் நூற்றாண்டு கட்டடக்கலைப் பணிக்குச் சிறந்த எடுத்துக் காட்டாக விளங்குகிறது