Author: ரகமி

Pages: 232

Year: 2023

Price:
Sale priceRs. 300.00

Description

அப்போது அந்த 25 வயது வாலிபன் வேகமாக வந்தான். இடுப்பிலிருந்த பஞ்ச கச்ச வேஷ்டியை மடித்து தார்ப்பாச்சிக் கட்டிக்கொண்டு உடம்பின் மேலே பச்சைகலந்த சாமள வர்ணத்தில் கோட்டும். அதற்கு மேல் மார்பில் அங்கவஸ்திரத்தை கிராஸ் பெல்ட் மாதிரி குறுக் காகக் கட்டிக்கொண்டிருந்தான். தலையில் குடுமி வாரி முடித்திருந்தான். முன்னந்தலையிலும், முகத்திலும் சிறிய தாடி மீசை. அவன் கலெக்டர் உட்கார்ந்திருந்த முதல் வகுப்புப் பெட்டியினருகே வந்து நின்றான். இளைஞனின் கையில் துப்பாக்கியைப் பார்த்து திடுக்கிட்ட ஆஷ். உடனே சட்டென்று வேகமாக எழுந்து தன் தலையிலிருந்த தொப்பியைக் கழற்றி அவன் மீது வீசியெறிந்தார். ”டூமில்…டூமில்.. டூமில்!…” துப்பாக்கி வெடிக்கும் சத்தங்கள் தொடர்ந்து கேட்டன. கலெக்டர் ஆஷ் தன் மார்பை கைகளால் பிடித்துக் கொண்டேநின்றவர். தொடர்ந்து நிற்க சக்தியில்லாமல் தடுமாறி கீழே சாய்ந்தார்.

You may also like

Recently viewed