Description
விபத்தில் ஒரு காலை இழந்தும் பரதநாட்டியம் ஆடியே தீருவேன் என்று பிடிவாதம் பிடித்த சுதா சந்திரன்
* மூளையின் ஏற்பட்ட பாதிப்பையும் தாண்டி ஒலிம்பிக் சாதனை படைத்த லியாண்டர் பயஸ்
* முதுகும் கால்களும் பாதிக்கப்பட்டிருந்தும் எவரெஸ்ட்டை அடைந்த ஜீன்கோ தபே
* கிழிபட்ட மண்ணீரல், கோமா என்ற பாதிப்புகளைத் தாண்டி எழுந்து நின்ற அமிதாப் பச்சன்
* போலியோவால் பாதிக்கப்பட்டும் பல ஒலிம்பிக் மெடல்களைப் பெற்ற வில்மா ருடால்ஃப்
* நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டும் கிரிக்கெட்டில் சாதனை படைத்த வாசிம் அக்ரம்
* வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டும் அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய ஆல்பிரட் நோபல்
உடல் பலவீனங்களையும் மீறி சாதனை புரிந்த இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை குறித்த இந்த நூல் நமக்கு புத்துணர்ச்சி அளிப்பதோடு சிறப்பான வழிகாட்டியாகவும் திகழ்கிறது.