Description
“கோர்ட்டில் கண்ணைக் கட்டி கொண்டிருக்கும் பெண் யார்?… தாயில்லா பிள்ளைக்கு பால் கொடுத்த பசு… விபரம் அறிய “
நம் நாட்டில், சைவம், வைணவம் இன்று நிலைத்து நின்றாலும், அனைவரையும் அணைத்துச் செல்லும் மதமாக இருந்தது சமண மதம். சமண மதக் கோவில்களில் இருந்த சில தெய்வங்களே இந்து தெய்வங்களாக பிற்காலத்தில் மாறியுள்ளன. அது மட்டுமா! சிலப்பதிகாரம், குண்டலகேசி உள்ளிட்ட இலக்கிய வரலாறுகளும் சமணம் சார்ந்தவையே என்பதை ஆணித்தரமாக சுட்டுகிறது இந்த நூல். நீதிமன்றங்களில், கண்ணைக் கட்டிக் கொண்டு, தராசை ஏந்தியிருக்கும் அந்தப் பெண் யார் என்ற கேள்விக்கும், இந்த நூலில் விடை தந்துள்ளார் நூல் ஆசிரியர் தராசு ஷ்யாம். அரசியல் செய்திகளை அள்ளித் தந்தவரின் இலக்கிய அறிவு இத்தகையதா என வியக்க வைக்கும் நூல் இது.