Description
வாடகைத் தாய் முறை மனித மாண்பிற்கு எதிராக இருக்கிறது. பெண்ணை இயந்திரமாக மாற்றுவதற்கு அறிவியல் பயன்படுத்தப்படுகிறது. தன்னுடல் மீதான உரிமையை ஏழைப் பெண்ணுக்கு வாடகைத் தாய் முறை மறுக்கிறது. அவளை இழிவுபடுத்துகிறது. அவளைக் கடைச்சரக்காக மாற்றுகிறது. அவளின் கருப்பைக்கு விலைபேசுகிறது. பிறக்கும் குழந்தையின் எதிர்காலத்தை கேள்விக்கு உள்ளாக்குகிறது. உழைக்கும் வர்க்கப் பெண்களைச் சுரண்டும் புதிய முறையாக வாடகைத் தாய் முறை இருக்கிறது.