ஒரு புனைகதையின் ஆரம்ப வரிகள் படைப்பாளியைவிட… வாசகனுக்கு மிகவும் முக்கியமானவை. வாசிக்க வேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டும் அவ்வரிகளே. கதையினுள் அவனை ஈர்த்து… அழைத்துச் செல்லும் திறவுகோலாக அமைகின்றன. இல்லையேல் இந்த அவசரமான உலகில் அவை வாசிக்கப்படாமலே போய்விடும்.