Description
பதினெட்டு வயதில் சுரங்க வேலைக்கு அவன் வந்து சேர்ந்தான். அப்பொழுதும் நிலக்கரிச் சுரங்கங்கள் தனியாருக்குச் சொந்தமான வையே அவர்கள் பகுதி பகுதியாக ஒப்பந்தக்காரர்களுக்கு வழங்கி விடுவார்கள். சுரங்க முதலாளிக்கு ஊற்றுத்தண்ணீர் கொட்டிக் கொண்டிருப்பதுபோல பண ஊற்று வீடெல்லாம் நிறைந்து வழியும். ஒப்பந்தக்காரர்களிடத்தில் வேலை செய்வதென்பது கொத்தடிமை.
ஓடுகிற பாம்பைப் பிடித்துச் சுழற்றியடிக்கக் கூடிய வயது வாழ்க்கையின் நெருக்கடி இளம் வயதிலேயே வயிற்றுப் பிழைப்பிற்காக இங்குள்ள சுரங்கங்களை நாடி வரவேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. கிராமத்தில் கடுமையான பஞ்சம். மனிதன் சாப்பிடுவதற்கான அனைத்துப்பொருட்களும், தாவரங்களுமே அருகிப்போய்விட்டன.