Description
கலையாத கனவுகள். பெயர்க்கேற்ப படித்து முடித்தாலும் கலையாத கனவுகளாகவே கதைக்கருவை மனதில் நிறைத்திருக்கின்றார் ஆசிரியர். அக்காலச் சிறுவர்களின் வளர்ச்சி அவர்களின் விருப்பத்திற்கேற்ப அல்லாமல் சூழலுக்கேற்ப அமைந்திருந்ததையும் அதில் வாட்டங்கள் பல இருப்பினும் நாட்டங்கள் துணை கொண்டு வாழ்வில் நிறைவை எட்டியுள்ளதையும் நாம் அறிய முடிகின்றது.