Description
முஸ்லிம்கள் அனைவரும் ஒரே சமுதாயத்தினர் என்றும், ஒருவர் மற்றவரது இன்ப – துன்பங்களில் பங்கெடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் இஸ்லாம் அறிவுறுத்துகிறது. எனினும் அது முழு மனிதகுல நன்மைக்கும் பயனுக்கும் பொறுப்பேற்கிறது.
எந்த தனி மனிதனின் மீதும் வெறுப்புணர்வோ, இன மாச்சரியமோ கொள்ளக் கூடாது. தேவைப்படும்போது இயன்ற அளவு சேவையாற்ற வேண்டும் என்பது அந்த பொறுப்பு உணர்வின் வெளிப்பாடாகும். இந்த உண்மையை மறந்துவிடலாகாது.
சிறியவர் பெரியவர் யாராயினும் சேவையாற்றுவதற்கு அது ஆர்வமூட்டுகிறது. அதனால் அனைவரும் எளிதாக சேவையாற்றி தமது பங்களிப்பை நிறைவேற்ற முடியும். அத்துடன் நற்சேவையாற்றுவதற்கான முக்கியத்துவத்தை தெள்ளத் தெளிவாக விவரிக்கிறது. அதில் தனிமனிதருக்கும் அரசாங்கத்திற்கும் உரிய பங்குகளை வழங்கியுள்ளது.