நம் வாழ்வில் தணிக்கை


Author: இரா. திருப்பதி வெங்கடசாமி

Pages: 136

Year: 2024

Price:
Sale priceRs. 155.00

Description

நம் வாழ்வில் தணிக்கை தனிமனித, குடும்ப. சமூகத்தின் நிதி மற்றும் இணையப் பயன்பாட்டை மேம்படுத்தும் உற்ற துணைவன். கடினமாக உழைக்கும் பொறுப்புள்ள ஒவ்வொருவருக்குமான வழிகாட்டி. இரா. திருப்பதி வெங்கடசாமி இந்த நூல், மூன்று பகுதிகளாய் குடும்பத் தணிக்கையில் தொடங்கி, இன்டர்நெட் பயன்பாட்டுத் தணிக்கை பற்றி விளக்கி, மக்கள் தணிக்கையை அறிமுகம் செய்து முடிகிறது. முற்பகுதி குடும்பம் முன்னேற தணிக்கை மூலமாகக் கண்டறிய வேண்டுவனவற்றை விளக்குகிறது. இன்றைய டிஜிட்டல் உலகில் நமக்கும், நமது குடும்பத்தினருக்கும் கேடு விளைவிக்கும் ஏமாற்று வேலைகளையும், அவற்றில் இருந்து நம்மைப் பாதுகாக்கும் அடிப்படை அறிவை வழங்குகிறது. இறுதியாக. மக்கள் தணிக்கையை அறிமுகம் செய்து வைத்து மக்களாட்சி மாட்சி பெற சமூகத் தணிக்கை எப்படி ஓர் பேராற்றலாய் உருப்பெற இயலும் என்பதை விளக்கி முடிக்கிறது. கருத்துக்களைக் கோர்த்து எளிமையாய் வாசகர் உள்ளத்தே நிலைநிறுத்த வரைபடங்களையும், பட்டியல்களையும் ஆசிரியர் பயன்படுத்தி உள்ளார். சில இடங்களில் நிகழ்வுகளை கதையாய்ச் சொல்லி வாசகரை வயப்படுத்துகிறார். கற்போருக்கு மனதில் கருத்துகளை இருத்திக்கொள்ள இது உதவும். சி.நெடுஞ்செழியன் IAAS, தமிழ்நாடு தலைமைக் கணக்காயர்,

You may also like

Recently viewed