Description
செங்காரம் சமூகச் சிக்கல்கள், காதல். இயற்கை மற்றும் மனிதர்கள் குறித்தப் பல்சுவை கவிதைத் தொகுப்பு
இரா. திருப்பதி வெங்கடசாமி
இவரது கவிதைகள் காட்டுச் செடியின் மணம் மாறாமல் வசீகரிக்கும் தன்மை கொண்டவை. இவரது தொகுப்பின் பெயரே, இவரை, இவரின் கவிதையை அனைவருக்கும் இனம் காட்டும். செங்காரம், காரமென்றாலும் உணவிற்கு சுவைதானே, வாழ்வின் ஆதாரத்தை அசைத்து மறுதலிக்கும் இக்கவிதைகளும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்கு அவசியமானவை.
இந்தக் கவிதைத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் ஏதோ ஒரு கதையை, வாழ்வை, நினைவை, நிகழ்வைச் சொல்லிச் சொல்லி அழச் செய்கின்றன அல்லது கேள்வி எழுப்புகின்றன; அல்லது கேலி செய்து நம்மை ஆச்சரியப்படுத்துகின்றன.
பா.தேவேந்திர பூபதி