Description
எலியட் கவிதைகள் அனைத்தையும் அடக்கிச் செய்த முழுமையான தமிழாய்வு என்பது, 'அவதரிக்கும் சொல் - டி.எஸ்.எலியட் கவிதைகள்' என்ற நம்பி கிருஷ்ணனின் நூலே என்று எண்ணுகிறேன். தமிழ் வாசகருக்குப் புதையலெடுத்த தனம் போல் கிடைத்துள்ள முக்கியமான எலியட் இலக்கியப் பதிவு இது. 'நுட்பமான வாசிப்புகள், மீள் வாசிப்புகள் ஒரு கட்டாயச் சடங்கு போல் மேற்கொள்ளப்பட வேண்டும்' என்று பாழ்நிலம் கவிதை பற்றிப் பேசும்போது நம்பி குறிப்பிடுகிறார். அவருடைய அடர்த்தியான கட்டுரைகளும் அத்தகைய மீள் வாசிப்புகளையே வேண்டி நிற்கின்றன. அவ்வாறு வாசிக்கிறவர்களுக்கு, 'வாய்புகு சோறாய்' ஒரு தனித்த நுகர்வின்பம் காத்திருக்கிறது. அவருடைய சொற்களிலேயே சொல்ல வேண்டுமாயின், ”கவிதைப் பித்தர்களுக்கு ஒரு விமர்சனப் பொக்கிஷம் காத்திருக்கிறது”.