Description
பூர்வீகமாக வாழ்ந்த நிலத்தை விட்டு வேறு ஒரு இடத்துக்கு புலம்பெயர்த்தப்படுதல் என்பது இரத்தமும் சதையுமாக சிவக்கும் இதயத்தைப் பிடுங்கி அனல் கொதிக்கும் பாலைநிலத்தில் வீசியெறியும் செயல். அவ்வாறான கொலைகளை ஒருமுறை அல்ல, இருமுறை அல்ல, பலபத்து முறைகள் ஈழம் சந்தித்தது. முதலில் இனக்கொலைகளில் தொடங்கிய இந்த அவலம் பிறகு இராணுவ ஆக்கிரமிப்புக்கள் என்ற வகையில் நீண்டு கடைசியில் 2009 இல் மொத்த இனத்தையே முடித்துவிடும் வெறியோடான இனவழிப்பாகவே மாறிப்போனது. அப்படியொரு கொடுஞ்சுழலில் சிக்கி தத்தளித்த குழந்தைகளின் கதையே இந்த அம்புலிமாமா ஊஞ்சல் ஒரு குழந்தைக்கும் போருக்குமான தொடர்பு எப்படியிருக்கிறது என்பதை எழுத்தில் பதிய வைக்கும் முயற்சி.