Description
மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் உங்களைச் சந்திக்க வருகிறது. கண்ணுக்குத் தென்படும் அத்தனைப் பொருளோடும் பழகிட விரும்பும் குழந்தையை என்ன செய்வதென்று தெரியாத அம்மாவிற்காக ஒரு கதையும், குழந்தையின் பேச்சை ஒழுங்கு செய்வதே தனது தலையாய கடமையாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிற்காக ஒரு கதையும், நகர வீட்டின் பத்தாவது மாடியில் வசித்தபடி வானத்திலும் மிதக்க முடியாமல்,மண்ணிலும் உலாவ முடியாமல் தவிக்கும் குழந்தைக்காக ஒரு கதையும், நிறைய குழந்தைகளுக்கு அருகில் இருந்தும் குழந்தைகளோடு என்ன செய்வதென்று அறியாத மனிதருக்காக ஒரு கதையும், கிணற்று நீரையும், பனங்காடை, பஞ்சுருட்டான் பறவைகளையும், பனைமரங்களை ஒட்டிச்செல்லும் சகதிப் பாதையையும், குளத்தங்கரை ஆலமரத்தடியில் கொட்டிக்கிடக்கும் ஈரக்காற்றையும் இழந்துவிட்டு தொட்டிச்செடிக்கு அருகில் வாழ்ந்துவரும் முதியவருக்காக ஒரு கதையும், கதைகளை எந்தக் காரணமும் இன்றி நேசிக்க விரும்பும் இலக்கியக்காரருக்காகப் பலப்பலக் கதைகளையும் சேர்த்துக்கொண்டு மிக நல்ல காலத்தில் இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.