Author: க.நா. சுப்ரமண்யம்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 140.00

Description

க.நா.சு என்று பரவலாக அறியப்படும் க. நா. சுப்ரமண்யம், (கந்தாடை சுப்ரமண்யம், ஜனவரி 31, 1912 - டிசம்பர் 18, 1988), ஒரு குறிப்பிடத்தக்க தமிழ் எழுத்தாளர், இலக்கிய விமர்சகர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். தஞ்சாவூர் மாவட்டம், சுவாமிமலை எனும் ஊரில் பிறந்த க.நா.சு, சுவாமிமலை, சிதம்பரம் ஆகிய இடங்களிலும் வாழ்ந்தார். உலக இலக்கியத்திற்கு இணையாக தமிழ் இலக்கியம் வளரவேண்டும் என்ற எண்ணம் கொண்ட க.நா.சு, தமிழின் மிகச்சிறந்த ஆக்கங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். உலகத்தின் சிறந்த இலக்கிய ஆக்கங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டு, கடுமையாக உழைத்தார். ராமபாணம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், Lipi - Literary Magazine போன்ற சிற்றிதழ்களை நடத்தினார். “பொய்த்தேவு” புதினம் இவரது புகழ்பெற்ற படைப்பு. 1986ம் ஆண்டு “இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்” என்ற இவரது இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது. 2006ம் ஆண்டு இவரது நூல்களை தமிழ்நாடு அரசு நாட்டுடைமையாக்கியது.

You may also like

Recently viewed