Description
வெகுஜன எழுத்தின் வாசகர்களுக்குத் தீனியானது கணநேர பரபரப்பில் மனதை அமிழ்த்தி எடுக்க வேண்டும். நிறைவில் நீதிபோதனையும் மனதிற்கு மகிழ்வான முடிவும் அமைந்துவிட்டால் பரம திருப்தி. டீடீடியும் அம்பரும் அந்த வகையான படைப்புகள். இயற்கை வளங்களின் கள நிலவரம் கலவரமான நிலையில்தான் உள்ளது. அவற்றின் பின்னணியில் இரு குறுநாவல்களும் மர்மங்களின் முடிச்சுகளை இறுதியில் அவிழ்க்கும். சுவாரசியங்களும் மர்மங்களும் வாசகர்களை வாசிப்பின் சுவைக்கு இட்டுச்செல்லும் என்று உறுதியாக நம்பலாம். திரைக்கதை பாணியில் அமைந்த டீடீடி, மாத நாவல் பாணியில் அமைந்த அம்பர் ஆகிய இரண்டும் மர்மங்களின் புனைவு.
- முத்துச்செல்வன்