கோளாறு எங்கே


Author: டாக்டர் யூசுஃப் அல் கர்ளாவி தமிழில் அஷ்ஷெய்க் ரவூஃப் ஸெய்ன்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 170.00

Description

ஒருவரை ஒருவர் விமர்சித்துக் கொண்டிருக்கும் நம் எல்லோரையும் உள்ளடக்கியதே இஸ்லாமிய சமுதாயம். கோளாறுகள் உள்ள இடங்களைக் கவனமாக இனங்காண்பதும் அதற்குப் பரிகாரம் காண்பதுமே விமோசனத்திற்கான வழியாகும். அதை விடுத்து வெற்று விமர்சனம் எதையும் சாதித்து விடாது. இஸ்லாமிய சமூக மாற்றத்திற்காக உழைக்கின்ற இயக்கங்களை மட்டும் எப்போதும் குறை கூறுவதும் அடுத்தவர்களே எல்லாவற்றையும் செய்து விடுவார்கள் என்று எதிர்பார்த்து ஒதுங்கிக் கொள்வதும் தான் நமது வீழ்ச்சியின் தொடக்கம். சுயவிமர்சனம் இல்லாத தனிமனிதனும், சுயவிமர்சனம் அற்ற சமூகமும் ஒரு போதும் மாற்றத்தை நோக்கி நகர முடியாது. ஆனால், வெறும் சுயவிமர்சனங்களும் செயற்களத்தில் ஒன்றும் செய்து விடுவதில்லை. கருத்துக்களும் சிந்தனைகளும் செயல் வடிவம் பெறும் போது மாற்றம் நிகழ்கின்றது. சமகால இஸ்லாமிய இயக்கங்கள், உலகளாவிய இஸ்லாமிய சமூகம் ஆகியன குறித்து சுயமதிப்பீடு செய்வதன் தேவையை உணர்ச்சி ததும்பும் நடையில், ஆனால் அறிவுப்பூர்வமான வாதங்களுடன் கருத்துக்களை நகர்த்திச் செல்கிறார் யூசுஃப் அல் கர்ளாவி.

You may also like

Recently viewed