Description
நவீன இலக்கியத்தில் சிறுகதைகளிலும் கவிதைகளிலும் உச்சத்தைத் தொட்ட படைப்புகளை எழுதியவர் ஹோர்ஹே லூயிஸ் போர்ஹெஸ். உண்மையில் பல நூறு பக்கங்களில் சொல்ல வேண்டிய விமர்சனத்தை போர்ஹெஸின் கவிதைகள் சில வரிகளிலேயே கூர்மையாகச் சொல்லிவிடுகிறது. இந்தக் கூர்மையான, அவதானங்களும், கனவுகளைப் பற்றியும் கண்ணாடிகளைப் பற்றிய அவருடைய கவிதைகளும், முடிவிலிகளையும் சரித்திர சம்பவங்களைப் பற்றிய சிறுகதைகளும் போர்ஹெஸை அர்ஜெண்டினாவில் என்று மட்டுமில்லாமல் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இலக்கியங்கள் அனைத்திலும் செல்வாக்கு மிக்க எழுத்தாளராய் நிலைநிறுத்தின. அதனால் பல விமர்சகர்கள் லத்தீன் அமெரிக்க இலக்கியங்களின் மாயா யதார்த்தத்தின் தோற்றுவாய்களில் ஒன்று போர்ஹெஸின் எழுத்துக்கள் என்று வரையறுக்கிறார்கள்.
- எம்.டி. முத்துக்குமாரசாமி