Description
நாம் ஏறக்குறைய தினசரிகளில் சந்தித்துக் கொண்டிருக்கும் உதிரியானச் சில மனிதர்களின் கதைகள் தான் இவை. கதைகளுக்குள்ளாக ஊடாடிக்கொண்டிருக்கும் இவர்களின் சித்திரங்களைக் கொஞ்சமும் பெரிது படுத்திடாமல் அதன் உட்புறமான வாழ்வின் சாகசங்களை அதன் குறைகளுடனும், பலவீனங்களுடனுமே சொல்ல முயன்றிருக்கிறேன். ஒவ்வொரு உணர்வுகளுக்குப் பின்னாலும் செயல்படும் மனதின் பெரும் ஆற்றல் நிறைந்த ஒரு வரைபடத்தின் தன்மையே இக்கதைகளில் நரம்புகளெனப் பரவியிருக்கின்றன. வாழ்விலிருந்து நழுவிட முடிந்திடாத சகமனிதர்களுக்குள்ளிருக்கும் பிரமிப்பும், ஆசுவாசமும், தவிப்பும், ஆறுதலும், பேரன்புமே இத்தனை சொற்களாக உருமாறியிருக்கின்றன.