Description
நீலகிரி மாவட்டம், பொறங்காடுசீமை, ஒரசோலைக் கிராமத்தைச் சார்ந்த முனைவர் கோ.சுனில்ஜோகி கோவை, குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறையில் உதவிப்பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். நீலகிரி படகர்கள் குறித்த முதல் இனவரைவியல் புதினமான, ‘மாதி’. நீலகிரி படகர்கள் குறித்த முதல் சிறுகதைத் தொகுப்பான 'ஓணி' உள்ளிட்ட, படகர்களின் வாழ்வியலை மையமிட்ட இவரின் நூல்வரிசையில் மூன்றாவது நூலாக இந்த, 'பொட்டி' எனும் சிறுகதைத் தொகுப்பு திகழ்கின்றது. படகர், பழங்குடி வாழ்வியல் குறித்த 70 மேற்பட்ட ஆய்வுக்கட்டுரைகள், 400 மேற்பட்ட கவிதைகள் உள்ளிட்ட ஆக்கங்களை அச்சு மற்றும் இணைய இதழ்களில் வெளியிட்டுள்ளார்.