Description
தீவிர அரசியலும் தீவிர மதவாதமும் ஒன்றையொன்று தழுவிக்கொள்ளும் தனித்துவமான களமாக ஆப்கானிஸ்தான் திகழ்கிறது. வஹாபிசம் தொடங்கி கம்யூனிசம்வரை பலவிதமான கோட்பாடுகள் அந்நிலத்தில் பரிசோதிக்கப்பட்டிருக்கின்றன. சுதந்தரத்தைக் கொண்டுவருகிறோம், மக்களை விடுவிக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு உள்ளே நுழைந்தவர்கள் மக்களின் துயரத்தை அதிகப்படுத்தியதைத் தவிர வேறெதையும் சாதிக்கவில்லை. உள்ளூர் போராளிகள் முதல் உலகப் பெரும் சக்திகள்வரை ஒருவராலும் மக்களை அழிவிலிருந்து மீட்கமுடியவில்லை. மாறாக, அவர்களுடைய முயற்சிகள் அழிவைத் துரிதப்படுத்துவதில்தான் சென்று முடிந்திருக்கின்றன. இப்படியோர் அவலம் ஏன் அம்மக்களுக்கு நேர்ந்தது என்பதை ஸர்மிளா இந்நூலில் தெளிவாக உணர்த்துகிறார்.
- மருதன்