Description
இந்த நாவலில் கதை என்று எதுவும் நகர்வதில்லை. இப்பெரும் வாழ்க்கையை மொத்தமாகக் கோர்த்துக் கூறப்படும் பெரும்பாலான கதைகளில் எந்த உள்ளீடும் இருப்பதாகத் தெரியவில்லை. பெருநகர இரவின் தெருவிளக்கு ஒளியில் தூசுகளைப் போல சுற்றிக்கொண்டிருப்பவர்களின் நடனத்தை சிறிதுநேரம் நின்று வேடிக்கைப்பார்க்கும் ஒரு முயற்சி இது.
இந்த மனித சமூகம் வண்ணமயமான ஒரு உலகத்தில் வாழ்ந்துகொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மையில் மனிதர்களே பலவித வண்ணங்களால் ஆனவர்கள் தான். ஒருவரை ஒருவர் உருமாற்றி அலைய வைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் வண்ணங்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டி. உரசி கலந்து உருமாறி எது உண்மை, எது பொய், எது கற்பனை என தன்னைத்தானே குழப்பிக்கொள்கிறது.