மாஹிம் நகர் மர்மம்


Author: ஜெர்ரி பிண்டோ தமிழில் லியோ ஜோசப்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 399.00

Description

ஒரு மர்மம் நிறைந்த கொலை, நெஞ்சைப் பதற வைக்கும் உளவியல் திகில், அது பற்றி அப்போது எழும் சமூகப் பிரதிபலிப்பு ஆகிய அனைத்தும் பொதிந்து கிடக்கும் 'மாஹிம் நகர் மர்மம்' என்னும் இந்நூலில், மின்னும் கதாபாத்திரங்கள், அவை ஏற்படுத்தும் அனுதாப உணர்வுகள், கதையின் போக்கில் ஏற்படும் மெல்லிய மாற்றங்கள் ஆகிய அனைத்தும் நம்மை பிரமிக்க வைக்கின்றன. இந்த ஆரவாரங்களுக்கு எந்தக் குறையுமில்லாமல் மும்பை நகரம் இயங்கிக் கொண்டே இருக்கிறது. ஓர் இளைஞன் மாதுங்கா ரயில் நிலையம் அருகில் இறந்து பிணமாகக் கிடக்கிறான். அவனது வயிறு கிழிக்கப்பட்டு பிளவுண்டு காணப்படுகிறது. ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் பீட்டர், தனது நண்பரான இன்ஸ்பெக்டர் ஜெண்டே என்பவருடன் சேர்ந்து துப்புத் துலங்க முயல்கிறார், அப்போது விரக்தி, பேராசை, காமக் களியாட்டங்கள் நிறைந்த ஓர் உலகைக் கண்டடைகிறார். அந்த உலகில் தன் மகனும் ஓர் அங்கமாக இருப்பானோ என்று அஞ்சுகிறார். பயத்தாலும் அனுதாபத்தாலும் உந்தப்பட்ட பீட்டர், உடல் இச்சைக்கு ஓர் ஆண் இன்னொரு ஆணை நாடும் அவலத்தை அறியும் பொருட்டு மர்மம் நிறைந்த இன்னொரு உலகத்தைக் காட்டும் ஆடம்பரப் பிரியரான லெஸ்லி என்பவரின் உதவியுடன் அந்தக் கொலையாளியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்.

You may also like

Recently viewed