Author: விளாடிமிர் பகமோலவ்

Pages: 0

Year: 2024

Price:
Sale priceRs. 130.00

Description

போரில் குழந்தைகளைப் பற்றி உங்களுக்கு நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருப்பேன். ஆனால், இப்பொழுது நீங்கள் படிக்கப்போகிற கதையானது, ஒளிவு மறைவின்றி நம்பிக்கையோடும் கண்டிப்போடும், நமது காலம் வரை வாழாமற் போன உங்கள் வயதை ஒத்த ஒரு பையனின் வீரச்செயல்களை எடுத்துக்கூறும் என்று நான் நினைக்கிறேன். பாசிஸத்தை எதிர்த்து நடந்த போரில் அவன் அழிந்து போனான். அதன் காரணமாகத்தான் உங்களிடத்திலும் குழந்தைகளிடத்திலும் வந்து சேராமல் இடை வழியிலேயே பாசிஸம் தனது சொந்த ரத்தத்தாலேயே மூச்சடைத்துப் போயிற்று ஆகவே, இளம் வாசகர்களே, அறிவுக் கூர்மையுடையதும் கடினமானதுமான ஒரு நூலை விட்டுவிட்டு நான் விலகிக் கொள்கிறேன். கவனமாகப் படியுங்கள். ருஷ்யச் சிறுவனாகிய இவானின் துணிவு, பேராண்மை மற்றும் முக்கியமாக உங்கள் நாட்டை நேசித்தல் ஆகிய பண்புகளைக் கற்றுக் கொள்ளுங்கள். * விளாடிமிர் பகமோலவ்

You may also like

Recently viewed