Description
கதை ஆசிரியரின் அனுபவங்கள் கதைகளாகும்போது, உணர்வு கலந்த சொல்லாடல்களுடன் அந்தக் கதை வாசிப்பாளனைக் கட்டிப்போடும். இப்படியான கதைகளை எழுதியிருக்கிறார் சந்துரு மாணிக்கவாசகம். இவர் உதவி இயக்குநராகப் பயணிப்பதால் கதாபாத்திரங்கள் மூலம் நம்மையும் பயணிக்க வைக்கிறார். ‘தஞ்சாவூர்க் கனவு’ என்ற சிறுகதையில் பிழைப்புக்காகப் புலம்பெயரும் மனிதர்கள், பிறந்த ஊரின் ஏக்கத்தோடு வாழ்தலை மிக அழகாகப் பதிவு செய்துள்ளார். ‘பிச்சை’ என்ற சிறுகதையில் பிள்ளைகள், பெற்றோரின் அருகில் இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது. இப்படி ஒவ்வொரு கதையிலும் வாழ்வியலின் எதார்த்தங்களை உணர்த்துகிறது. சிறந்த கதாசியர் என்பதை அடையாளப்படுத்துகிறது. நூலில் மொத்தம் 15 சிறுகதைகள், ஒவ்வொன்றும் மனித குலத்திற்குத் தேவையான நல்ல செய்தியைச் சொல்லும் விதமாகக் கதைப் போக்கை அமைத்திருப்பது பாராட்டுக்குரியது. பல இலட்சம் சிறுகதைகள், இங்கே இன்னும் சொல்ல வேண்டியது நிறைய இருக்கிறது என்பதை சந்துரு மாணிக்கவாசகம் தனது சிறுகதைகள் மூலம் உணர்த்துகிறார். அவசியம் படிக்க வேண்டிய சிறுகதை நூல்.