Description
மக்களின் இயல்பான வழக்குமொழியைத் தன் படைப்பு மொழியாகக் கொண்ட கி. ராஜநாராயணன் எழுதிய குறுநாவல் 'பிஞ்சுகள்’.
பள்ளிப் பருவத்தில் தொடங்கும் நாவல் வெங்கடேஷ், செந்திவேல், அசோக் ஆகிய சிறுவர்கள் வழியாக மகிழ்ச்சியின் உச்சிக்கிளையைத் தொடுகிறது. ரப்பர் வில்லுடன் திரியும் திருவேதி நாயக்கர் பறவை வேட்டையை மாய ஜாலத்துடன் நிகழ்த்திக் காட்டுகிறார்.
வாழ்வின் அசைவுகளை இயற்கையின் துணையோடு புனைவுகளாக்கும் கி.ரா., சிறுவர்களோடு வளர்ப்பு மைனாக்கள், காகங்கள், நாய்கள், கிளிகளையும் இந்த நாவலில் பாத்திரங்களாக்கியிருக்கிறார். குழந்தைகளின் உலகைக் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் கண்டுணரும் விதமாக இயல்பாகப் படைத்திருக்கிறார்.