Description
உடல்நலமின்றி, கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து மாலதி கணிப்பொறியில் எழுதுவதைக் கற்பனை செய்து பார்த்தேன். எத்தனை உழைப்பு? எத்தனை ஆர்வம்? எத்தனை வலுவான மனம்? சில நாட்களில் இன்னொரு அறுவை சிகிச்சை நடக்கப்போவதாக மாலதி சொன்னார். அதற்கும் அவர் தயாராகிக்கொண்டு இருந்தார்.
அவர் முன்னுரை கேட்டபோது மூன்று நாட்களில் எழுத முடியாது என்று சொன்னதை நினைத்து வெட்கப்பட்டேன்.
எப்படி வாழவேண்டும் என்று அவர் கற்றுத் தருகிறார். அவர் கதைகளும் அதையே செய்கின்றன.
மாலதியின் கதைகளை அவசரமாகவோ மேலோட்டமாகவோ படிக்கக் கூடாது. ஊன்றிப் படிக்கும்போதுதான் பனிமூட்டம் விலகுவதுபோல சொற்கள் விலகி பளிச்சென்று உண்மை வெளிப்படும்.
‘இரு புறமும் சுழலும் கடிகாரம்’ சிறுகதையை எழுதி சிறுகதை உலகத்துக்குள் நுழைந்தவர் மாலதி. இனி கடிகாரம் நான்கு புறமும் சுழல வேண்டும். நிற்காமல் சுழலட்டும்.
அ.முத்துலிங்கம்