Description
விலங்கை உடைத்து...' என்னும் தலைப்பில் தனது வாழ்க்கை வரலாற்றினைக் காசி ஆனந்தன் எழுதியுள்ளார். அவரது வாழ்க்கை வரலாறு என்பதை விடத் தமிழீழ விடுதலைப் போராட்ட வரலாறாக அது அமைந்துள்ளது என்றே கூற வேண்டும். அறப்போராட்ட காலத்திலும் மறப்போராட்ட காலத்திலும் இயக்கத்தோடு ஒன்றிணைந்து நின்ற இன்றும் நிற்கும் ஒருவரால் மட்டுமே இத்தகைய வரலாற்றுப் பதிவைச் செய்ய முடியும். அந்தத் தனி ஒருவர்தான் காசி ஆனந்தன் ஆவார். 'விலங்கை உடைத்து.. ' என்னும் தலைப்பில் காசி ஆனந்தன் அவர்கள் எழுதியுள்ள தன்வரலாறு தனித் தன்மை வாய்ந்ததாகும். இதற்கு இணையான வேறொரு நூலினை நாம் பார்க்க இயலாது. நூல் நெடுகிலும் கவித்துவம் பொதிந்த சொற்றொடர்களை அவர் பெய்திருக்கிறார். நூலின் சிறப்பை அது மேலும் கூட்டுகிறது. தமிழர் தலைவர் பழ.நெடுமாறன்